sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 தள்ளுபடி விலையில் தங்கம்; தேவை குறைந்ததே காரணம்

/

 தள்ளுபடி விலையில் தங்கம்; தேவை குறைந்ததே காரணம்

 தள்ளுபடி விலையில் தங்கம்; தேவை குறைந்ததே காரணம்

 தள்ளுபடி விலையில் தங்கம்; தேவை குறைந்ததே காரணம்


ADDED : பிப் 14, 2026 11:41 AM

Google News

ADDED : பிப் 14, 2026 11:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் தேவை குறைவு காரணமாக, தங்கம் விற்பனையாளர்கள் முதல்முறையாக நேற்று சர்வதேச விலையை விட, ஒரு அவுன்சுக்கு (31.10 கிராம்) 1,100 ரூபாய் வரை குறைத்து விற்பனை செய்துள்ளனர். கடந்த வாரத்தில், அதிகபட்சமாக 6,300 ரூபாய் வரை பிரீமியம் விலையில் தங்கத்தை விற்று இருந்தனர்.

உலகளாவிய நிச்சயமற்றத்தன்மை உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்ட சூழலில், 10 கிராம் தங்கம் விலை, கடந்த வாரங்களில் 1.33 லட்சம் ரூபாயிலிருந்து 1.54 லட்சம் ரூபாயாக உயர்ந்தது.

நகைகளுக்கு செய்கூலியில் தள்ளுபடி அளித்தும், அதீத விலை உயர்வு காரணமாக, பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

மறுபுறம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 80 மெட்ரிக் டன் தங்கம் வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்ய அரசு அனுமதிக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, மொத்த மற்றும் நகை வியாபாரிகள், புதிதாக வங்கிகளிடம் இருந்து தங்கம் கொள்முதல் செய்வதை ஒத்தி வைத்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது விலை ஏற்றத்தாழ்வு இருந்தாலும், 2026ம் ஆண்டு இறுதிக்குள், தங்கம் ஒரு அவுன்ஸ் 5.46 லட்சம் ரூபாயை எட்டும் என்றும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் நல்ல லாபத்தை தரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us