ரூ.10 லட்சத்தை ஒரு கோடியாக பெருக்கி தந்த தங்க இ.டி.எப்., 18 ஆண்டுகளில் 950% லாபம்
ரூ.10 லட்சத்தை ஒரு கோடியாக பெருக்கி தந்த தங்க இ.டி.எப்., 18 ஆண்டுகளில் 950% லாபம்
ADDED : அக் 10, 2025 03:00 AM

அ ண்மைக் காலமாகவே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், நாட்டின் பழமையான தங்க இ.டி.எப்., திட்டமான 'நிப்பான் இந்தியா இ.டி.எப்., கோல்டு' முதலீடு, 950 சதவீத லாபத்தை வாரி வழங்கியுள்ளது.
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், இந்த தங்க இ.டி.எப்., திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு, இப்போது 1 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.
உலோகமாக அல்லாமல், பாதுகாப்பு அம்சம் மிக்க, எக்ஸ்சேஞ்ச் டிரேட பண்டு எனப்படும் இ.டி.எப்., அதில் முக்கியமானது.
தங்கம் தொடர் சாதனை தங்கம் உலகளவில் மற்றும் உள்நாட்டில் தொடர்ந்து தன் சொந்த சாதனைகளை முறியடிக்கும் நேரத்தில், இந்த வலுவான லாபம் பலரையும் வியக்கச் செய்திருக்கிறது.
ஜூலை 2007ல் தொடங்கப்பட்ட நிப்பான் இந்தியா இ.டி.எப்., கோல்டு பண்டு, இப்போது முதலீட்டாளர்களின் 24,000 கோடி ரூபாயை நிர்வகிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் இதன் மதிப்பு, 56 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.