இன்போசிஸ் பங்குகள் விலை 5 சதவிகிதம் உயர்வு பைபேக் முடிவு குறித்து எகிறும் எதிர்பார்ப்பு
இன்போசிஸ் பங்குகள் விலை 5 சதவிகிதம் உயர்வு பைபேக் முடிவு குறித்து எகிறும் எதிர்பார்ப்பு
UPDATED : செப் 10, 2025 01:02 AM
ADDED : செப் 10, 2025 01:01 AM

இ ந்தியாவின் இரண்டாவது பெரிய ஐ.டி., நிறுவனமான இன்போசிஸ், நாளை நடக்க இருக்கும் இயக்குனர்கள் கூட்டத்தில் தன்னுடைய பங்குகளை திரும்பப்பெறுவது அதாவது பை பேக் குறித்த முடிவை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
![]() |
கடந்த 1993ம் ஆண்டில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து தற்சமயம் வரை 2017, 2019, 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் இன்போசிஸ் நிறுவனம் நான்கு முறை தன்னுடைய பங்குகளை விலை கொடுத்து, திரும்பப்பெற்றுள்ளது. பொதுவாக ஒரு சில முன்ணனி ஐ.டி., நிறுவனங்கள், கையில் இருக்கும் ரொக்கத்தை, டிவிடெண்ட், ஸ்பெஷல் டிவிடெண்ட் மற்றும் பைபேக் போன்றவற்றின் வாயிலாக, முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகின்றன.
நாளை நடைபெற இருக்கும் இயக்குநர்கள் கூட்டத்தில், பைபேக் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டு, கூட்டம் முடிந்த பின் பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்கப்படும். நடப்பு செப்டம்பர் காலாண்டு முடிவதற்கு முன்பாகவே இது குறித்த முடிவு எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
![]() |
இன்போசிஸ் பைபேக் குறித்த தகவல்கள் வெளியானதை அடுத்து, நேற்று இன்போசிஸ் பங்கின் விலை 4.85% ஏற்றத்துடன், 1,502.40- ரூபாயில் நிறைவடைந்தது. அமெரிக்க வரிவிதிப்பு மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பம் போன்ற பல சிக்கலான சூழ்நிலைகளை ஐ.டி., துறையினர் எதிர்கொள்ளும் தற்போதைய இக்கட்டான சூழலில், இன்போசிஸ் நிறுவனத்தின் பைபேக் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மற்றொரு பக்கம் அன்னிய முதலீட்டாளர்கள், ஐ.டி. நிறுவன பங்குகளை விற்றுவருவதும் இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.