ADDED : அக் 02, 2025 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொது துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சேமிப்பு கணக்குகளில் சராசரி குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்படாவிட்டாலும் அபராத கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என அறிவித்துள்ளது.'
இது, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த செப்., மாதம் வரை, சராசரி குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்படாத கணக்குகளில் விதிகளின்படி அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் வங்கி விளக்கம் அளித்துள்ளது.பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி ஆகியவை ஏற்கனவே, குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு அபராத கட்டணத்தை ரத்து செய்துள்ளன.