ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஏ.எம்.சி.,
நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இரண்டாம் நாளான நேற்று 2.11 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டது. நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 3.79 மடங்கும்; நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 2.91 மடங்கும்; சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் 83 சதவீதமும் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிறுவனம் ஐ.பி.ஓ., வாயிலாக 10,603 கோடி ரூபாய் திரட்டுகிறது.
கொரோனா ரெமடீஸ்
நிறுவனத்தின் பங்குகள், சந்தையில் நேற்று 35 சதவீதத்துக்கும் அதிக லாபத்துடன் பட்டியலிடப்பட்டன. பங்கு வெளியீட்டின் போது, பங்கு ஒன்றின் விலை 1,062 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தேசிய பங்குச் சந்தையில் 1,470 ரூபாய்க்கும்; மும்பை பங்குச் சந்தையில் 1,452 ரூபாய்க்கும் வர்த்தகத்தை துவங்கியது. நாள் முடிவில், என்.எஸ்.இ.,யில் 1,438.40 ரூபாய்க்கும்; பி.எஸ்.இ.,யில் 1,437.20 ரூபாய்க்கும் நிறைவடைந்தது.
வேக்பிட் இன்னோவேஷன்ஸ்
நிறுவனத்தின் பங்குகள், சந்தையில் எந்த மாற்றமும் இன்றி ஐ.பி.ஓ., விலைக்கே பட்டியலிடப்பட்டன. புதிய பங்கு வெளியீட்டின் போது பங்கு ஒன்றின் விலை 195 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நேற்று சந்தையிலும் 195 ரூபாய்க்கே வர்த்தகத்தை துவங்கிய நிலையில், இடையில் 177 ரூபாய் வரை சென்றது. வர்த்தக நேரத்தின் முடிவில் தேசிய பங்குச் சந்தையில் 192.29 ரூபாயாக இருந்தது.

