ADDED : மார் 05, 2026 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கோ ட்டக் மஹிந்திரா' வங்கி தனது கணக்கு பராமரிப்பு மற்றும் கார்டு கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. புதிய கட்டண முறை, வரும் ஏப்., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, 'எவரிடே' டெபிட் கார்டுக்கான ஆண்டு கட்டணம் 259 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. 'பே ஷாப் மோர்' கார்டுகளுக்கான கட்டணம் 285 ஆக உயர்கிறது. வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் இ.எம்.ஐ., போன்ற பரிவர்த்தனைகள் தோல்வியடைந்தால், முதல் முறைக்கு 500 ரூபாயும், இரண்டாவது முறையிலிருந்து 550 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.
ரொக்க பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் மூன்றாம் தரப்பு பணப்பரிமாற்ற கட்டணங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

