ADDED : டிச 17, 2025 02:10 AM

இ -காமர்ஸ் நிறுவனமான, 'மீஷோ'வின் தலைமை செயல் அதிகாரி விதித் ஆத்ரேய், 8,000 கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகியிருக்கிறார்.
இந்நிறுவனம், சமீபத்தில் ஐ.பி.ஓ., வெளியிட்ட நிலையில், ஒரு பங்கின் விலை 105-111 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த 10ம் தேதி, ஒரு பங்கின் விலை கி ட்டதட்ட 170 ரூபாய்க்கு பங்குச்சந்தையில் பட்டியலானது. பட்டியலிடப்பட்ட ஒரே வாரத்துக்குள் ஐ.பி.ஓ., விலையில் இருந்து இந்நிறுவன பங்குகள் 74 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, விதித் ஆத்ரேய் வைத்துள்ள 45.65 கோடி பங்குகளின் விலையும் கணிசமாக உயர்ந்தது.
இதனால், அவரின் சொத்துமதிப்பு 8,834 கோடி ரூபாயாக உயர்ந்ததால், விதித் ஆத்ரேய், பில்லியனர்கள் அதாவது 100 கோடி டாலர் சொத்து கொண்டோர் பட்டியலில் இணைந்துள்ளார். இத்தகவலை மும்பை பங்குச் சந்தையின் தரவுகள்தெரிவிக்கின்றன.

