ADDED : ஜூன் 24, 2026 03:09 AM

டாடா ஏ.ஐ.ஏ.,
டாடா ஏ.ஐ.ஏ., ஆயுள் காப்பீட்டு நிறுவனம், 'யுலிப்' காப்பீடு இணைக்கப்பட்ட முதலீட்டு திட்டத்தின் கீழ், புதிய 'மல்டி அசெட் இண்டெக்ஸ்' பண்டை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தில் 80 - 100 சதவீதம் வரை பங்குச் சந்தையிலும், மீதமுள்ளவை ரொக்கம் மற்றும் பத்திர சந்தையிலும் முதலீடு செய்யப்படும். இந்த நிதியை நிறுவனத்தின் பல்வேறு காப்பீடு மற்றும் சேமிப்பு திட்டங்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப காலம்: ஜூன் 23 - ஜூன் 30
நிகர சொத்து மதிப்பு (என்.ஏ.வி.,): ரூ.10
நோக்கம்: சந்தை அதிக ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் தற்போதைய சூழலில், முதலீட்டாளர்களுக்கு நிலைத்தன்மையை வழங்குவது.
ஜே.எம்., பைனான்சியல்
ஜே.எம்., பைனான்சியல் மியூச்சுவல் பண்டு நிறுவனம், புதிய 'மல்டி அசெட் அலோகேஷன் பண்டு' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பண்டு திட்டத்திற்கான விண்ணப்ப காலம், ஜூன் 24 தொடங்கி ஜூலை 8ல் முடிவடைகிறது. இத்திட்டத்தின் வாயிலாக திரட்டப்படும் நிதி பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பல தரப்பட்ட முதலீட்டு பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்யப்பட உள்ளது. பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப முதலீட்டு விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். கடந்த மே 31ம் தேதி நிலவரப்படி, ஜே.எம்., பைனான்சியல் நிறுவனத்தின் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 12,809 கோடி ரூபாயாக உள்ளது.
