
ஐ.சி.ஐ.சி.ஐ.,புரூடென்ஷியலின் முதல் எஸ்.ஐ.எப்.,
'ஐ.சி.ஐ.சி.ஐ.,புரூடென்ஷியல்' நிறுவனம் புதிய வகை முதலீட்டு முறையான எஸ்.ஐ.எப்., பிரிவில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஐ.எஸ்.ஐ.எப்., ஹைப்ரிட் லாங்-ஷார்ட் பண்டு மற்றும் ஐ.எஸ்.ஐ.எப்., ஈக்விட்டி எக்ஸ்-டாப் 100 லாங்-ஷார்ட் பண்டு' ஆகியவற்றில் முதலீடு செய்ய இன்று முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச முதலீடு 10 லட்சம் ரூபாய். சாதாரண மியூச்சுவல் பண்டு மற்றும் பி.எம்.எஸ்., சேவைகளுக்கு இடைப்பட்டதே எஸ்.ஐ.எப்., முறை.
பராக் பரிக் லார்ஜ் கேப் பண்டு
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், 'பராக் பரிக்' நிறுவனம் தனது புதிய லார்ஜ் கேப் பண்டு ஒன்றை அறிவித்துள்ளது. இதில், முதலீடு செய்ய ஜனவரி 19 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதல் 100 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதே இதன் நோக்கம்.
கோட்டக் நிப்டி 200 வேல்யூ 30 இண்டெக்ஸ் பண்டு
'கோட்டக் மஹிந்தரா மியூச்சுவல் பண்டு' அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தொகை 100 ரூபாய். நேற்று முதல் வரும் ஜனவரி 29ம் தேதி வரை இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். நிப்டி 200ல் உள்ள மதிப்புமிக்க 30 நிறுவன பங்குகளில் முதலீடு செய்து லாபத்தை பெருக்குவதே இதன் நோக்கம்.

