ADDED : ஜன 22, 2026 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 2025ம் ஆண்டு பட்ஜெட்டுக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகள் சார்ந்த இ.டி.எப்., பண்டுகள், ஏறக்குறைய 45 சதவீத லாபத்தை அளித்துள்ளது, தரவுகளில்
தெரியவந்துள்ளது.
பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில், 1.78 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. வாராக்கடன் குறைந்து, வங்கிகளின் லாபம் அதிகரித்துள்ளது, அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது குறித்த பேச்சு உள்ளிட்டவையே இத்துறையின் வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இத்துறை சார்ந்த இ.டி.எப்., பண்டுகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கின்றன.

