தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஐபிஓ அலசல்: எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்

ஐபிஓ அலசல்: எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்

ஐபிஓ அலசல்: எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்


ADDED : ஜூலை 14, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 12:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனங்களில் (ஏ.எம்.சி.,) ஒன்றாகும். இது எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டின் முதலீட்டு மேலாளராக செயல்படுகிறது. இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் மியூச்சுவல் பண்டு, போர்ட்போலியோ மேலாண்மை சேவைகள் மற்றும் ஆல்டர்னேட் முதலீட்டு சேவைகளை வழங்குகிறது. இ.டி.எப்., மற்றும் இண்டெக்ஸ் பணடு போன்ற பேஸிவ் முதலீட்டு திட்டங்களையும் நிர்வகித்து வருகிறது.

ஐ.பி.ஓ., ஆரம்ப தேதி 14-07-2026

ஐ.பி.ஓ., நிறைவு தேதி 16-07-2026

பட்டியலிடப்படும் சந்தைகள் என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ., நாள்: 21-07-2026 (உத்தேசமாக)

திரட்டப்படும் தொகை ரூ. 9,812.91 கோடி

புதிய பங்குகள் வெளியீடு இல்லை

ஆபர் பார் சேல் ரூ. 9,812.91 கோடி (அதிகபட்ச அளவு ரூபாயில்)

முக மதிப்பு ரூ.1/-

விலை வரம்பு ரூ.545 முதல் ரூ.574 வரையில்

விண்ணப்பிக்க குறைந்த பட்ச அளவு: எண்ணிக்கை 26 பங்குகள் தொகை ரூ. 14,170/-

சிறப்பம்சங்கள்



• காலாண்டு சராசரி ஏ.யூ.எம்., அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனம்.

• எஸ்.பி.ஐ.யின் நாடு முழுமையான வலையமைப்பும், அமுண்டியின் உலகளாவிய முதலீட்டு அனுபவமும் பலமாக உள்ளது.

• அதிக எஸ்.ஐ.பி. கணக்குகள் மற்றும் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கை கொண்டுள்ளது.

• நாடு முழுதும் பரந்த வினியோக வலையமைப்புடன் செயல்படுகிறது.

• போர்ட்போலியோ மேலாண்மை சேவைகள் மற்றும் சிறப்பு முதலீட்டு நிதி துறைகளில் வலுவான இடத்தை பெற்றுள்ளது

• சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் புதிய முதலீட்டாளர்களை வேகமாக ஈர்த்து வருகிறது.

• பேஸிவ் முதலீடு, இ.டி.எப்., ஆல்டர்னேட் முதலீட்டு நிதிகள் மற்றும் எஸ்.ஐ.எப்., போன்ற துறைகளில் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன

• தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வின் வாயிலாக முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ற முதலீட்டு சேவைகள் வழங்கி வருகிறது.

ரிஸ்க்குகள்



• புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்கு எஸ்.பி.ஐ.,யின் வினியோக வலையமைப்பை அதிகமாக சார்ந்திருப்பது

• பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் நிறுவனத்தின் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பையும் வருமானத்தையும் பாதிக்கக்கூடும்

• எஸ்.பி.ஐ., பெயர் மற்றும் லோகோவை உரிம ஒப்பந்தத்தின் கீழ் மட்டுமே பயன்படுத்த முடியும்; அதற்காக ராயல்டியும் செலுத்த வேண்டும்.

• எஸ்.பி.ஐ.யின் பங்கு 26 சதவீதத்துக்கும் கீழ் சென்றாலோ அல்லது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாலோ, நிறுவனத்தின் லாபம் பாதிக்கப்படலாம்.

• நிறுவனத்தின் முதலீட்டு சொத்துகளில் சில பெரிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு அதிகமாக உள்ளது

• பேஸிவ் முதலீட்டு திட்டங்களின் பங்கு அதிகரிப்பதால், வருவாய் வளர்ச்சிக்கான வாய்ப்பு குறையக்கூடும்

• சில ஆக்டிவ் ஈக்விட்டி திட்டங்களின் முதலீட்டு முடிவுகள், போட்டி நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடும்போது மாறுபடலாம்

• பிற பெரிய சொத்து மேலாண்மை நிறுவனங்கள், பின்டெக் நிறுவனங்கள் மற்றும் டிஸ்கவுன்ட் புரோக்கர்கள் ஆகியவற்றின் போட்டி அதிகரித்து வருவது.

கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்கவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us