'மல்டி ஆப்ஷன் டிபாசிட்' வரம்பை அதிகரித்தது எஸ்.பி.ஐ.,
'மல்டி ஆப்ஷன் டிபாசிட்' வரம்பை அதிகரித்தது எஸ்.பி.ஐ.,
ADDED : பிப் 11, 2026 01:44 AM

ஸ் டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது 'மல்டி ஆப்ஷன் டிபாசிட்'டின் குறைந்தபட்ச வரம்பை 35,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
'மல்டி ஆப்ஷன் டிபாசிட்' என்பது, சேமிப்பு கணக்கில் உள்ள இருப்பு, குறிப்பிட்ட வரம்பை கடந்தால், கூடுதல் தொகையை தானாகவே 'பிக்சட் டிபாசிட்' திட்டமாக மாற்றும் வசதியாகும். இதனால், பயன்படுத்தப்படாமல் இருக்கும் பணத்துக்கு அதிக வட்டி கிடைக்கும்.
அதாவது, 'ஆட்டோ ஸ்வீப் சேமிப்பு' கணக்கில் 50,000 ரூபாயை கடந்த தொகை, தானாக எம்.ஓ.டி., கணக்குக்கு மாற்றப்பட்டு, 'பிக்சட் டிபாசிட்' திட்டத்துக்கு கொடுக்கப்படும் வட்டி இதற்கு வழங்கப்படும்.
சேமிப்பு கணக்கில் பணம் குறைந்தால், எம்.ஓ.டி., கணக்கிலிருந்து தேவையான தொகை தானாகவே எடுத்து கொள்ளப்படும்.
முக்கிய அம்சங்கள்
* தனிநபர்கள் தனியாக அல்லது கூட்டு கணக்காக துவங்கலாம்
*மைனர்கள், பாதுகாவலர் வாயிலாக துவங்கலாம்
* 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி சேர்க்கப்படும்
*குறைந்தபட்ச காலம் ஓர் ஆண்டு; அதிகபட்ச காலம் 5 ஆண்டுகள்
*மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி
*முதிர்வுக்கு முன்கூட்டியே பணம் எடுத்தால் அபராதம்
முக்கிய நன்மைகள்
*பயன்படுத்தப்படாத பணத்துக்கு அதிக வட்டி
*தேவையான நேரத்தில் பணம் எடுக்கும் வசதி
* பாதுகாப்பான முதலீட்டு தேர்வு
*சேமிப்பும் வருமானமும் ஒரே நேரத்தில் கிடைப்பது.

