sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

ஐ.பி.ஓ., பிசிக்ஸ் வாலா விண்ணப்பத்தில் இடம்பிடித்த அதிர்ச்சி தகவல்கள்

/

ஐ.பி.ஓ., பிசிக்ஸ் வாலா விண்ணப்பத்தில் இடம்பிடித்த அதிர்ச்சி தகவல்கள்

ஐ.பி.ஓ., பிசிக்ஸ் வாலா விண்ணப்பத்தில் இடம்பிடித்த அதிர்ச்சி தகவல்கள்

ஐ.பி.ஓ., பிசிக்ஸ் வாலா விண்ணப்பத்தில் இடம்பிடித்த அதிர்ச்சி தகவல்கள்


UPDATED : செப் 10, 2025 01:40 AM

ADDED : செப் 10, 2025 01:39 AM

Google News

UPDATED : செப் 10, 2025 01:40 AM ADDED : செப் 10, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3,820 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, 'பிசிக்ஸ் வாலா' நிறுவனம், செபிக்கு விண்ணப்பித்திருந்தது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழக்கத்துக்கு மாறான மற்றும் கல்வி கற்கும் சூழலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சில நிகழ்வுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image 1467172


இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2023ல், வீடியோ கால் பயிற்சி வகுப்பில் மாணவர் ஒருவர், ஆசிரியரிடம் செருப்பை காட்டி மிரட்டினார். அதே ஆண்டில், பயிற்சி மையத்தில், ஆசிரியர் ஒருவர் மாணவரை தள்ளிவிடும் காணொளி, இணையத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து, அந்த ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு எங்களது டில்லி பயிற்சி மையத்தில், மாணவர் ஒருவரின் மீது மின்விசிறி விழுந்து, விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியரின் மீது எப்.ஐ.ஆர்., பதியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Image 1467173


மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறினால், நிறுவனத்தின் நற்பெயருக்கும், வணிகத்துக்கும் மோசமான பாதிப்பு ஏற்படும். கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் துன்புறுத்தல், பாதிப்பு சம்பவங்களுக்கு மத்தியில், மாணவர்களின் நலனை உறுதி செய்வது கல்வித் துறைக்கு சவாலான விஷயமாக மாறியுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

இன்று முதல் தேவ் எக்ஸ் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


அலுவலக தீர்வுகள், இணை பணி இடங்கள் வழங்கும் நிறுவனமான தேவ் ஆக்சிலரேட்டரின் புதிய பங்கு வெளியீடு இன்று துவங்குகிறது. தேவ் எக்ஸ் என அறியப்படும் இந்நிறுவனம், நாடு முழுவதும் 15 இடங்களில் செயல்படுகிறது. 143 கோடி ரூபாய் திரட்டுவதற்கான 2.47 கோடி பங்குகளை, 56 முதல் 61 ரூபாயில் பெற விண்ணப்பிக்கலாம்.

***

வரிசைகட்டும் தமிழக நிறுவனங்கள்


புதிய பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுவதற்கான செபியின் அனுமதியை, தமிழகத்தைச் சேர்ந்த 5 நிறுவனங்கள் பெற்றுள்ளன.

நிறுவனங்கள் திரட்டும் தொகை (ரூ/கோடி)

லலிதா ஜூவல்லரி 1,700

வெரிடாஸ் பைனான்ஸ் 2,800

சி.ஐ.இ.எல்., எச்.ஆர்., 335

மில்கி மிஸ்ட் டைரி புட் 2,035

ஜெயின் ரிசோர்சஸ் 2,000

நடப்பு ஆண்டில், ஏற்கனவே, டாக்டர் அகர்வால் ஹெல்த் கேர், சத்வா இன்ஜினியரிங் கன்ஸ்டிரக்ஷன், எல்.ஜி.டி., பிசினஸ் கனெக்ஸ்ஷன், பிளை எஸ்.பி.எஸ்., ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிட்டு, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us