டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் வர 25,990-ஐ கடந்து செல்ல வேண்டும்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் வர 25,990-ஐ கடந்து செல்ல வேண்டும்
UPDATED : அக் 31, 2025 12:04 PM
ADDED : அக் 31, 2025 03:13 AM

நிப்டி	25,984.40	26,032.05	25,845.25	25,877.85
நிப்டி பேங்க் 58,152.05 58,331.20 57,999.20 58,031.10
நிப்டி
 இறக்கத்தில் ஆரம்பித்து, கடைசி வரை இறக்கத்திலேயே தொடர்ந்து, இறுதியில் 176 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 14 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில்  'நிப்டி மிட்கேப் செலக்ட்' குறியீடு அதிகபட்சமாக 0.27% ஏற்றத்துடனும்; நிப்டி குறியீடு அதிகபட்சமாக 0.68% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 2 ஏற்றத்துடனும்; 15 இறக்கத்துடனும் நிறைவடைந்தது. இதில் 'நிப்டி எனர்ஜி' குறியீடு அதிகபட்சமாக 0.12% ஏற்றத்துடனும்; அதிகபட்சமாக 'நிப்டி பைனான்ஷியல் சர்வீசஸ் குறியீடு 0.77% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,178 பங்குகளில் 1,320 ஏற்றத்துடனும்; 1,745 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.
|  | 
நிப்டி 10, 20, 50 மற்றும் 200 நாட்கள் சாராசரிகளுக்கு மேலேயே வர்த்தகமாகிறது என்பதால், பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பு இன்னமும் டெக்னிக்கலாக தென்படவில்லை. திசை தெரியா நிலையோ அல்லது அவ்வப்போது திடீர் இறக்கங்கள் வந்துபோகவோ வாய்ப்புள்ளது. 25,990 என்ற நிலையை, வால்யூமுடன் கடந்தால் மட்டுமே, ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.
ஆதரவு	25,800	25,730	25,655
தடுப்பு	25,990	26,100	26,175
 நிப்டி பேங்க் 
 
 இறக்கத்தில் ஆரம்பித்து, கடைசி ஒரு மணி நேரத்தில் கணிசமாக இறங்கி, நாளின் இறுதியில் 354 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. வேகமான இறக்கம் வந்துபோவதற்கான அறிகுறிகள் தென்பட்ட போதிலும், அதை உறுதி செய்ய 57,905-க்கு கீழ் வால்யூமுடன் நடக்கவேண்டும். இதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் சூழலே நிலவுகிறது. ஏற்றம் மீண்டும் தொடர 58,450 என்ற தடுப்பை கடந்து செல்லவேண்டும்.
ஆதரவு	57,905	57,780	57,660
தடுப்பு 58,240 58,450 58,575

