டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,100 ரெசிஸ்டென்ஸ் மீண்டும் உருவெடுக்கிறது
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,100 ரெசிஸ்டென்ஸ் மீண்டும் உருவெடுக்கிறது
UPDATED : டிச 05, 2025 01:28 AM
ADDED : டிச 05, 2025 01:22 AM

நிப்டி
ஆரம்பத்தில் இருந்தே சிறிது ஏற்றத்தில் பயணித்த நிப்டி, 1.30 மணியளவில் சிறிய இறக்கத்தை சந்தித்து மீண்டு, பின்னர் நாளின் இறுதியில் 47 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 8 ஏற்றத்துடனும்; 8 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி எப்பிஐ150' குறியீடு அதிகபட்சமாக 0.28 சதவிகித ஏற்றத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 0.54 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் நிப்டி ஐடி குறியீடு அதிகபட்சமாக 1.41 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி மீடியா குறியீடு அதிக பட்சமாக 1.45 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது.
![]() |
![]() |
|
![]() |
![]() |
வர்த்தகம் நடந்த 3,212 பங்குகளில், 1,380 ஏற்றத்துடனும்; 1,740 இறக்கத்துடனும்; 92 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஏற்றம் தொடர்வதற்கான உந்துதல் நிப்டியில் குறைவாகவே உள்ளது. இதனால் மீண்டும் 26,100 என்ற லெவல் திடமானதொரு ரெசிஸ்டென்ஸாக உருவாகிவிடும் வாய்ப்புள்ளது. ஆனாலும் 25,800-க்கு கீழே போகாதவரை பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பில்லை.
நிப்டி பேங்க்
ஆரம்பத்தில் இறக்கம், பின் உடனடி ஏற்றம் என்று 11.30 மணிவரை ஏற்றத்தில் நடைபெற்ற நிப்டி பேங்க், அதன் பின் இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் இறக்கத்தில் இருந்து மீண்டு, நாளின் இறுதியில் 59 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட ஒரு சிறிய இறக்கத்திற்கு தயாராவதைப்போன்ற டெக்னிக்கல் நிலைமை தென்படுகிறது. 58,700-க்கு கிழே செல்லாதவரை பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பில்லை. செய்திகளைப் பொறுத்து, திசை தெரியா நிலை வருவதற்கான சாத்தியக்கூறும் இருக்கவே செய்கின்றது.






