டெக்னிக்கல் அனாலிசி்ஸ்: 25,520-க்கு கீழே சென்றால் ஏற்றம் தடைபடலாம்
டெக்னிக்கல் அனாலிசி்ஸ்: 25,520-க்கு கீழே சென்றால் ஏற்றம் தடைபடலாம்
UPDATED : அக் 17, 2025 12:39 AM
ADDED : அக் 17, 2025 12:37 AM

குறியீடு	ஆரம்பம் 	அதிகம்	குறைவு 	நிறைவு
நிப்டி	25,394.90	25,625.40	25,376.85	25,585.30
நிப்டி பேங்க்	57,139.95	57,525.80	56,994.70	57,422.55
|  | 
நிப்டி
நண்பகலுக்குமேல் வேகமான ஏற்றம் கண்ட நிப்டி, நாளின் இறுதியில் 261 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 16- குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இதில் நிப்டி அதிகபட்சமாக 1.03% ஏற்றத்துடனும்;  நிப்டி ஸ்மால்கேப்50  குறைந்தபட்சமாக 0.04% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 16 ஏற்றத்துடனும்; 1 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் நிப்டி எப்.எம்.சி.ஜி., அதிகபட்சமாக 2.02% ஏற்றத்துடனும்;  நிப்டி பார்மா குறைந்தபட்சமாக 0.21% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி பி.எஸ்.யு., பேங்க் குறியீடு மட்டும் -0.44% இறக்கத்துடன் நிறைவடைந்திருந்தது.
வர்த்தகம் நடந்த 3,192 பங்குகளில் 1,812 ஏற்றத்துடனும்; 1,280 இறக்கத்துடனும், 100 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.  டெக்னிக்கலாக, நிப்டி புல்லிஷாக இருக்கின்ற போதிலும், சற்று ஓவர்பாட் நிலைமையை அடைந்திருப்பதால், வர்த்தக நாளுக்கு இடையே சிறிய இறக்கமோ அல்லது திசைதெரியா நிலையோ வந்து போகலாம். 25,520-க்குக் கீழே சென்றால், சிறிய அளவில் சரிவு ஏற்படலாம்.
|  | 
ஆதரவு	25,430	25,275	25,175
தடுப்பு	25,675	25,770	25,865
நிப்டி பேங்க்
மதியம் வரை ஒரளவு ஏற்றத்தில் இருந்த நிப்டி பேங்க், அதன் பிறகு கணிசமான ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 622 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. நிப்டி பேங்க் ஏற்றத்தின் பாதையில் இருக்கிறது என்பதை, எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி., போன்றவை ஆதரவாக இருப்பதால் உணர முடிகிறது. அவ்வப்போது கொஞ்சம் தடுமாற்றங்கள் வந்தாலும், ஏற்றம் தொடர்வதற்கு வாய்ப்புள்ளதைப் போன்ற நிலைமையே சார்ட்டில் தெரிகிறது. செய்திகள் ஆதரவாக இல்லாவிட்டால், சிறிய இறக்கமோ அல்லது திசை தெரியா நிலையோ வந்து போகலாம்.
ஆதரவு	57,100	56,775	56,570
தடுப்பு	57,625	57,845	58,045
***
நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம்	கடைசி விலை	மாற்றம் (ரூ.)	எண்ணிக்கை	டெலிவரி (%)
எட்டர்னல்	340.50	-13.85	9,11,94,459	33.64
ஐ.டி.சி.,	405.45	5.55	2,29,62,049	72.13
எச்.டி.எப்.சி., பேங்க்	993.60	15.35	2,29,36,566	64.64
டாடா மோட்டார்ஸ்	396.40	5.55	2,19,83,752	36.48
ஆக்சிஸ் பேங்க்	1,195.90	26.30	1,77,47,171	59.35
நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம்	கடைசி விலை	மாற்றம் (ரூ.)	எண்ணிக்கை	டெலிவரி (%)
எஸ் பேங்க்	23.13	-0.19	8,09,35,243	49.22
சுஸ்லான் எனர்ஜி	53.59	-0.14	4,88,68,416	65.97
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க்	71.81	-1.16	2,76,33,985	55.14
என்.எச்.பி.சி.,	86.91	-0.13	1,05,52,727	47.47
அசோக் லேலண்ட்	137.05	1.36	99,50,107	46.41
நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம்	கடைசி விலை	மாற்றம் (ரூ.)	எண்ணிக்கை	டெலிவரி (%)
என்.பி.சி.சி., (இந்தியா) லிட்.	112.25	0.38	96,69,421	36.30
இந்தியா எனர்ஜி எக்ஸ்சேஞ்ச்	134.97	-0.39	68,46,625	36.00
பந்தன் பேங்க்	161.65	-1.55	59,39,654	41.81
சி.இ.எஸ்.சி.,	174.88	-1.32	37,75,700	37.79
ஏஞ்சல் ஒன்	2,472.00	26.80	32,42,812	13.45
நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்
நிறுவனம்	கடைசி விலை	டெலிவரி வால்யூம் (%)	வர்த்தகம் நடந்த எண்ணிக்கை
ஜிந்தால் ஸ்டெயின்லெஸ்	808.20	44.31	6,96,824
சிஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல்	760.50	49.89	14,19,387
மஹிந்திரா & மஹிந்திரா	3,563.90	51.59	21,25,552
விப்ரோ	253.70	50.80	1,06,61,302
சாம்வர்தனா மாதர்சன்	107.23	32.27	1,86,10,741
*****

