sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ் : குழப்பமான டெக்னிக்கல் சூழல்: செய்திகளே வழிகாட்டும்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ் : குழப்பமான டெக்னிக்கல் சூழல்: செய்திகளே வழிகாட்டும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : குழப்பமான டெக்னிக்கல் சூழல்: செய்திகளே வழிகாட்டும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : குழப்பமான டெக்னிக்கல் சூழல்: செய்திகளே வழிகாட்டும்


UPDATED : ஏப் 10, 2026 12:44 AM

ADDED : ஏப் 10, 2026 12:40 AM

Google News

UPDATED : ஏப் 10, 2026 12:44 AM ADDED : ஏப் 10, 2026 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறிய இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து சிறிது சிறிதாக இறங்கி, நாளின் இறுதியில் 222 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு அதிக பட்சமாக 0.73 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 0.32 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 1.75 சதவிகித இறத்துடனும்; நிப்டி மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 1.25 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

Image 1561223




வர்த்தகம் நடந்த 3,322 பங்குகளில், 1,572 ஏற்றத்துடனும்; 1,670 இறக்கத்துடனும்; 80 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. 50 நாள் சராசரிக்கு கீழே நிப்டி மீண்டும் நிறைவடைந்துள்ளது. டெக்னிக்கலாக இன்னமும் பியரிஷ் குணாதிசியம் முழுமையாக மாறவில்லை என்றே கொள்ளலாம். மொமெண்டம் இண்டிகேட்டர்கள் (ஆர்.ஓ.சி., எம்.ஏ.சி.டி.,) சற்று ஏற்றத்திற்கு ஆதரவாக இருக்கும் போதிலும் ஆர்.எஸ்.ஐ., உடனடி ஏற்றத்துக்கான சூழலை காட்டவில்லை. எனவே, மேலே செல்வதற்கான வாய்ப்பு டெக்னிக்கலாக சற்று குறைவே. மேலும் 'ஸ்டோக்காஸ்ட்டிக்' சற்று 'ஓவர் பாட்' என்ற நிலைமையில் இருப்பதால், கன்சாலிடேஷனோ அல்லது இறக்கமோ வருவதற்கான வாய்ப்பே டெக்னிக்கலாக தெரிகிறது.

இறக்கம் வந்தால் நிப்டி 23,400 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. செய்திகள் மிகவும் ஆதரவாக இருந்தால் மட்டுமே ஏற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் 24,000-த்தில் உள்ள ரெசிஸ்டென்ஸை கடந்தால் மட்டுமே, ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us