தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டெக்னிக்கல் அனாலிசிஸ் பெரிய அளவிலான இறக்கத்திற்கு வாய்ப்பு குறைவு

டெக்னிக்கல் அனாலிசிஸ் பெரிய அளவிலான இறக்கத்திற்கு வாய்ப்பு குறைவு

டெக்னிக்கல் அனாலிசிஸ் பெரிய அளவிலான இறக்கத்திற்கு வாய்ப்பு குறைவு


UPDATED : ஜூலை 04, 2026 02:38 AM

ADDED : ஜூலை 04, 2026 02:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 02:38 AM ADDED : ஜூலை 04, 2026 02:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 199 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி தொடர்ந்து, சிறுசிறு இறக்கங்களை கண்டு நாளின் இறுதியில், 95 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1594807


இவற்றில், 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.28 சதவீத உயர்வுடனும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.33 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 15 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 2.19 சதவீதம் அதிகரித்தும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.54 சதவீதம் சரிந்தும் முடிந்தன. 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு மட்டும் மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்தது.

வர்த்தகம் நடந்த 3,436 நிறுவனங்களின் பங்குகளில் 1,823 ஏற்றத்துடனும்; 1,513 இறக்கத்துடனும்; 100 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன. நிப்டி அனைத்து குறுகிய மற்றும் மத்திம கால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்துள்ளது. மொமென்டம் இண்டிக்கேட்டர்களும் ஏற்றத்துக்கு சாதகமாகவே இருக்கின்றன. ஆர்.எஸ்.ஐ,, பாசிட்டிவ் எம்.ஏ.சி.டி., மற்றும் புல்லிஷ் க்ராஸ் ஓவருடனான ஸ்டோக்காஸ்ட்டிக் இண்டிக்கேட்டர் போன்றவை ஓரளவு வாங்கும் திறன் சந்தையில் இருப்பதை ஊர்ஜிதம் செய்வதாய் உள்ளது.

நிப்டி 24,420ல் வலுவான ரெசிஸ்டென்ஸ் இருக்கின்றது. 23,970-23,915ல் நல்லதொரு சப்போர்ட் இருக்கிறது. 24,420க்கு மேலே சென்றால் 24,550 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் 23,900த்திற்கு மேலே இருக்கும் வரை பெரிய அளவிலான இறக்கம் வருவதற்கான வாய்ப்பு இல்லை எனலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us