டெக்னிக்கல் அனாலிசிஸ் திடீர் இறக்கங்கள் வந்து போகக்கூடும்
டெக்னிக்கல் அனாலிசிஸ் திடீர் இறக்கங்கள் வந்து போகக்கூடும்
UPDATED : செப் 10, 2025 01:33 AM
ADDED : செப் 10, 2025 01:32 AM

நிப்டி
நேற்றைய வர்த்தகத்தில் 24,864- புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய நிப்டி, அவ்வப்போது 24,814 வரை சிறிது இறங்கினாலும்,அதன்பின் கடைசி வரை ஏறுமுகத்திலேயே 24,891 புள்ளியில் இருந்து வந்தது. நாளின் இறுதியில் 95 புள்ளிகள் ஏற்றத்துடன் 24,868- புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9) 21.89 ஆகவும்; ரேட் ஆப் சேஞ்ச் (12, CL) -0.86 ஆகவும் இருப்பது எந்த நேரத்திலும் சிறியதொரு இறக்கம் வருவதற்கான வாய்ப்புள்ளது என்பதையே காட்டுகிறது. 24,858 என்ற எல்லைக்கு கீழே போகாமல் வர்த்தகம் நடந்தால் மட்டுமே, இறக்கம் வருவதற்கான வாய்ப்பு இல்லை எனலாம்.
![]() |
தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி, நிப்டி 24,825, 24,785 மற்றும் 24,750 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 24,900, 24,935 மற்றும் 24,965 என்ற எல்லைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.
நிப்டி பேங்க்
நேற்று 54,330-ல் ஏற்றத்துடன் ஆரம்பத்த நிப்டி பேங்க், இறக்கத்தை சந்தித்து (54,079) 2.00 மணிக்கு மேல் ஏற ஆரம்பித்து, கடைசியில் 29 புள்ளிகள் ஏற்றத்துடன் (54,216) நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): -1.71 ஆகவும்; ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,CL): 39.68 ஆகவும், ரேட் ஆப் சேஞ்ச் (12,CL):-2.76 ஆகவும் இருக்கிறது.
இந்த நிலைமையில் ஏற்றம் உருவாக, இறுதி அளவான 54,216 என்ற அளவுக்கு கீழே இறங்காமல், அதற்கு மேலேயே தொடர்ந்து வர்த்தகம் நடைபெற வேண்டும் 54,080, 53,945 மற்றும் 53,840 போன்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும் 54,350, 54,485 மற்றும் 54,585 என்ற நிலைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் நிப்டி பேங்க் செயல்பட வாய்ப்புள்ளது.
![]() |