டெக்னிக்கல் அனாலிசிஸ்: விலை பெரிதாக நகராத தோற்றம் உருவாகிறது
டெக்னிக்கல் அனாலிசிஸ்: விலை பெரிதாக நகராத தோற்றம் உருவாகிறது
UPDATED : அக் 28, 2025 11:34 PM
ADDED : அக் 28, 2025 11:16 PM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 25,939.95 26,041.70 25,810.05 25,936.20
நிப்டி பேங்க் 58,006.55 58,313.80 57,770.35 58,214.10
![]() |
![]() |
நிப்டி
முதல் முக்கால் மணி நேரம் மட்டும் சிறிய ஏற்றத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம், அதன் பின் இறங்கி, நாள் முழுவதும் இறக்கத்தில் இருந்து மீளமுடியாமல், இறுதியில் 29 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு, அதிகபட்சமாக 0.23% ஏற்றத்துடனும்; 'நிப்டி நெக்ஸ்ட்50' குறியீடு அதிகபட்சமாக 0.51% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 6 ஏற்றத்துடனும்; 11 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.23% ஏற்றத்துடனும்; 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 1.05% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,237 பங்குகளில் 1,385 ஏற்றத்துடனும்; 1,728 இறக்கத்துடனும்; 124 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. சிறிய இறக்கத்துடன் நிறைவடைந்த போதிலும், நிப்டியில் இருக்கும் 'புல்லிஷ்னெஷ்' பெரிதாக குறையவில்லை. 'ஓவர் பாட்' நிலை ஓரளவுக்கு இருப்பதாலேயே, 'கன்சாலிடேஷன்' நடக்க வாய்ப்புள்ளது. 25,930-க்கு கீழேபோகாமல் இருந்தால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.
ஆதரவு 25,815 25,695 25,605
தடுப்பு 26,045 26,160 26,245
நிப்டி பேங்க்
ஆரம்பத்தில் ஏற்றம், பின் நண்பகல் வரை இறக்கம் என, ஏற்ற இறக்கங்களுடன் செயல்பட்ட நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 99 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பல டெக்னிக்கல் இண்டிகேட்டர்கள் 'நிப்டி பேங்க்' புல்லிஷாக இருப்பதையே உறுதிசெய்கின்றன. சிறிய இறக்கங்கள் வந்தாலும்கூட 58,100-க்கு கீழே போகாத வரை, ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பே தெரிகிறது.
ஆதரவு 57,880 57,550 57,340
தடுப்பு 58,425 58,640 58,845
நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
டாடா ஸ்டீல் 181.65 4.99 5,95,11,794 40.62
எச்.டி.எப்.சி., பேங்க் 1,004.90 1.95 3,39,04,289 52.51
எட்டர்னல் 335.00 1.30 2,87,23,423 61.20
ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 1,366.20 -11.40 2,64,77,914 56.87
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 930.50 7.75 2,20,66,289 49.59
நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
சுஸ்லான் எனர்ஜி 56.30 2.59 13,44,73,878 39.15
எஸ் பேங்க் 22.82 0.05 9,06,50,700 39.34
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 79.20 1.17 4,03,81,121 55.61
அசோக் லேலண்ட் 140.25 -0.56 2,13,34,243 54.08
இண்டஸ் டவர் 384.00 12.70 2,06,02,382 22.21
நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் 147.26 0.12 89,35,101 48.61
பந்தன் பேங்க் 175.21 3.17 76,22,416 41.76
என்.பி.சி.சி., (இந்தியா) 110.40 -1.10 53,74,777 42.79
ஐநாக்ஸ் விண்ட் 153.20 0.10 45,99,590 44.50
கிராம்ப்டன் 289.40 -2.65 45,33,574 66.61
நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்
நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை
கான்பிடன்ஸ் பெட்ரோலியம் 41.76 49.89 4,55,336
பல்ராம்பூர் சினி மில்ஸ் 469.80 83.01 11,01,110
ஸ்ரீராம் ப்ராபர்டீஸ் 93.05 53.99 12,39,032
வாஸ்கான் எஞ்சினியர்ஸ் 66.79 33.68 34,81,974
எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ் 747.00 58.43 38,59,058


