ADDED : ஜன 19, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்தையூர் வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
கிருஷ்ணராயபுரம், :சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை மந்தமாக இருந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் கூடுகிறது. நேற்று காலை ஆடு, கோழிகள் மற்றும் காய்கறி விற்பனை நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த வாரம் ஆடு, கோழிகள் விற்பனை தீவிரமாக நடந்தது. பொங்கல் விழா நிறைவு காரணமாக, சந்தைக்கு குறைந்தளவில் மட்டுமே ஆடு, கோழிகள் விற்பனைக்கு வந்தன.
இதில் ஏழு கிலோ கொண்ட ஆடு ஒன்று, 6,000 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஆடு, கோழிகள் விற்பனை மந்தமாக காணப்பட்டது.