ம.பி., கிராமப்புறங்களில் கிடைக்கும் குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு குடிப்பதற்கே தகுதியற்றது: ஜல் ஜீவன் மிஷன் ஆய்வில் பகீர்
ம.பி., கிராமப்புறங்களில் கிடைக்கும் குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு குடிப்பதற்கே தகுதியற்றது: ஜல் ஜீவன் மிஷன் ஆய்வில் பகீர்
UPDATED : ஜன 08, 2026 02:59 PM
ADDED : ஜன 08, 2026 12:23 AM

போபால்: மத்திய பிரதேசத்தில், கிராமப்புறங்களில் கிடைக்கும் குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு, குடிப்பதற்கே தகுதியற்றது என்பது, மத்திய அரசின், 'ஜல் ஜீவன் மிஷன்' நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துார் மாவட்டம், நாட்டிலேயே துாய்மையான நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
அதிர்வலை
சமீபத்தில், இந்த மாவட்டத்தின் பகீரத்புராவில், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய, 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ம.பி.,யின் கிராமப்புறங்களில் கிடைக்கும் குடிநீரில், மூன்றில் ஒரு பங்கு நீர், குடிப்பதற்கே தகுதியற்றது என்ற அதிர்ச்சி தகவல், ஜல் ஜீவன் மிஷன் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதன் விபரம்:
ம.பி., முழுதும், 15,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் இருந்து, 2024 செப்., - அக்டோபரில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இவற்றில், 63.3 சதவீதம் மட்டுமே தரப்பரி சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளன. இது, தேசிய சராசரியான, 76 சதவீதத்தை விட மிகக் குறைவு.
அதாவது, கிராமப்புறங்களில் வழங்கப்படும் குடிநீரில், 36.7 சதவீதம் மிகவும் பாதுகாப்பற்றது. இந்த குடிநீரில், பாக்டீரியா அல்லது ரசாயன நச்சுக்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களை குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளின் நிலை, இன்னும் மோசமாக உள்ளது. அங்குள்ள குடிநீர் மாதிரிகளில், 12 சதவீதம் மட்டுமே நுண்கிருமி பாதுகாப்பு பரிசோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளன.
தோல்வி
ம.பி.,யில், 88 சதவீத அரசு மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு பா துகாப்பற்ற குடிநீரையே வ ழங்குகின்றன.
அதே போல், பள்ளிகளில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில், 26.7 சதவீதம் தோல்வி அடைந்துள்ளன. இதனால், மாணவர்கள் மாசடைந்த நீரையே தினமும் பருகுகின்றனர்.
பழங்குடியினர் அதிகம் வாழும் அனுப்பூர், திண்டோரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், ஒரு இடத்தில் கூட குடிநீர் மாதிரி பாதுகாப்பானதாக இல்லை. பாலாகாட், பெதுல், சிந்த்வாரா ஆகிய மாவட்டங்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமான குடிநீர் மாதிரிகள் மாசடைந்துள்ளன.
ம.பி.,யில் வெறும், 31.5 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்பு உள்ளது. 99 சதவீத கிராமங்களில் குழாய் வினியோக அமைப்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும், 77 சதவீத வீடுகளில் மட்டுமே குழாய்கள் செயல்பாட்டில் உள்ளன. அதாவது, நான்கில் ஒரு வீட்டில் குழாய் இருந்தும் தண்ணீர் வரவில்லை.
இந்துார் மாவட்டத்தில், 100 சதவீத குழாய் இணைப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், அங்குள்ள வீடுகளில், 33 சதவீதம் மட்டுமே பாதுகாப்பான குடிநீரை பெறுகின்றன.
ஒட்டுமொத்தத்தில், ம.பி., முழுதும், 33 சதவீத குடிநீர் மாதிரிகள் தரப் பரிசோதனை களில் தோல்வி அடைந்துள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

