ADDED : ஆக 15, 2011 11:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மக்களின் உணர்வை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.
சுதந்திரதினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார். அப்போது கடுமையான லோக்பால் மசோதாவை கொண்டுவருவதாக கூறி உண்ணாவிரதம் இருப்போரை அவரது உரையில் குற்றம்சாட்டி பேசினார். இதற்கு பதிலளித்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரே குழு உறுப்பினரான கிரண்பேடி, பிரதமர் நாட்டு மக்களின் மன உணர்வை புரிந்து கொள்ளவில்லை எனவும், லோக்பால் மசோதா தொடர்பாக மக்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நம்பத்தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.