ADDED : ஆக 24, 2011 11:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தான் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், தனது உடல்நிலை குறித்து கவலைப்படவேண்டாம் என்று ஹசாரே தெரிவித்தார்.
இன்று ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாடிய அவர், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைளை எடுப்பதில் மத்திய அரசு இன்னும் மெத்தனமாக இருப்பதாக தெரிவித்தார். நேற்று தனது ஆதரவாளர்கள் குழுவுடன் பேரத்தில் மத்திய அரசு ஈடுபட்டதாக தெரிவித்த ஹசாரே, ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை போதுமான அளவில் இல்லை என்று தெரிவித்தார்.