ADDED : ஆக 28, 2011 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி மாநிலத்தில் உள்ள பல்கலைகழக மாணவர் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டில்லி பல்கலை கழகங்களில் உள்ள இந்திய தேசிய மாணவர் அமைப்பிற்கு நடத்தப்படும் தேர்தலில் அரசியில் கட்சியின் செல்வாக்கு மிக முக்கியமனதாக கருதப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.,ஆதரவு பெற்ற ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் டில்லியில் நடைபெற்று வரும் அரசியில் சூழ்நிலையில் வெற்றி பெறவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஆஸ்கார் பெர்ணான்டஸ் கலந்து கொண்டார்.

