sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரோசய்யாவின் கெட்டிக்காரத்தனம் : ஆந்திராவில் புகழாரம்

/

ரோசய்யாவின் கெட்டிக்காரத்தனம் : ஆந்திராவில் புகழாரம்

ரோசய்யாவின் கெட்டிக்காரத்தனம் : ஆந்திராவில் புகழாரம்

ரோசய்யாவின் கெட்டிக்காரத்தனம் : ஆந்திராவில் புகழாரம்


ADDED : அக் 12, 2011 12:20 AM

Google News

ADDED : அக் 12, 2011 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகரி : ஆந்திர அரசியலை விட்டு விலகி, தமிழக கவர்னராக பதவி வகித்து வரும் ரோசய்யாவின் ஆலோசனையை பெறாமல் மாநில அரசின் பட்ஜெட்டை தயாரிக்க முடியுமா என்பதே, ஆந்திர மாநில நிதி அமைச்சகத்தின் முன் தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.



ஆந்திராவில், அடுத்த (2012-13ம்) நிதியாண்டுக்கான மாநில அரசின் பட்ஜெட் தயாரிக்கும் பணி குறித்து, நிதி அமைச்சர் ராமநாராயண ரெட்டி மற்றும் நிதித்துறையின் உயர் அதிகாரிகள், இப்போது முதல் தீவிர ஆலோசனையில் மூழ்கியுள்ளனர்.

மாநில அரசின் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பதில், பொருளாதார ரீதியில் வல்லவர் என்ற பெயர் பெற்ற ரோசய்யா, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது நிதி அமைச்சர் பதவி உட்பட வேறு துறைகளிலும் அமைச்சராக பதவி வகித்து, தனக்கென தனி முத்திரை பதித்து, அப்போதைய முதல்வர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றார். இப்படி, மாநில சட்டசபையில் 16 முறை பட்ஜெட் சமர்ப்பித்த அனுபவமும் ரோசய்யாவிற்கு உள்ளது. அடுத்த நிதி ஆண்டுக்கென, 1 லட்சத்து இரண்டாயிரம் கோடி ரூபாயில் பட்ஜெட் போட வேண்டும் என, நிதி அமைச்சர் ஆலோசித்து வருகிறார். ஆந்திராவில் தற்போது நிலவிவரும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் இருந்து விலகி, தமிழக கவர்னர் பதவி வகித்து வரும் ரோசய்யா, அரசியல் அனுபவம் வாய்ந்தவர் மட்டும் அல்ல, பட்ஜெட் தயாரிப்பதிலும் சாணக்கியர் என்ற உயர்ந்த நற்சான்றை, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆளும் காங்கிரஸ் கட்சியினரும், அரசியல் தலைவர்களும் கவுரவ பட்டமாக வழங்கியுள்ளனர்.








      Dinamalar
      Follow us