வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / ரயில் சேவை ரத்து / ரயில் சேவை ரத்து
/
செய்திகள்
ரயில் சேவை ரத்து
ADDED : ஆக 06, 2024 01:27 AM
வங்கதேச கலவரத்தை தொடர்ந்து, இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள வங்கதேச எல்லையில், பி.எஸ்.எப்., பொறுப்பு இயக்குனர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, பாதுகாப்பு நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் பி.எஸ்.எப்., வீரர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பணிக்கு திரும்பும்படி அனைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கதேச கலவரத்தை தொடர்ந்து, இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள வங்கதேச எல்லையில், பி.எஸ்.எப்., பொறுப்பு இயக்குனர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, பாதுகாப்பு நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் பி.எஸ்.எப்., வீரர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பணிக்கு திரும்பும்படி அனைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தால், மேற்கு வங்கத்தின் கோல்கட்டா - வங்கதேசத்தின் டாக்கா இடையே, வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படும், 'மைத்ரி எக்ஸ்பிரஸ்' ரயில் சேவை, கடந்த 15 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயில் சேவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கோல்கட்டா - குல்னா இடையே வாரத்தில் இரு நாட்கள் இயக்கப்படும் பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் காலவரையறையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போல், வங்கதேசத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய விமான நிலையமான, டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம், நேற்று மாலை 6:00 மணிக்கு மூடப்பட்டது. விமான சேவை மீண்டும் துவங்குவது குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
தலைநகர் டாக்காவின் காக்ரைல் என்ற பகுதியில் உள்ள வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், நேற்று மாலை மர்ம நபர்கள் சூறையாடினர். மேலும், வீட்டில் இருந்த பொருட்கள், கார்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் அடித்து நொறுக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவத்தின் போது, தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் வீட்டில் இருந்தாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆளும் அவாமி லீக் கட்சியின் அலுவலகங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
டாக்காவின் தன்மோண்டி என்ற பகுதியில் உள்ள இந்திரா கலாசார மையம் மீது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். கலாசார மையத்துக்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதே போல், நான்கு ஹிந்து கோவில்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், கோவில்கள் சேதமடைந்தன.