ADDED : ஆக 05, 2011 05:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோயில் புதிய தந்திரியாக, கண்டரரு மகேஸ்வரரு நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தந்திரியாக பணியாற்றி வரும் கண்டரரு ராஜீவரரு, பதவிக்காலம் முடிந்து இன்று மலை இறங்கினார். பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலின் புதிய தந்திரியாக, சமீபத்தில் சதாபிஷேகம் கொண்டாடிய கண்டரரு மகேஸ்வரரு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே. இந்நிலையில், தற்போது தந்திரியாக பணியாற்றி வரும் கண்டரரு ராஜீவரரு பதவிக்காலம் இன்றோடு முடிவடைந்தது. இதையடுத்து அவர், மலையில் இருந்து கீழே இறங்கினார்.