ADDED : செப் 23, 2011 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'லஞ்சம் வாங்காதீர்கள்' என்ற பிரசாரத்தை, ஹசாரே குழுவில் உள்ளவர்கள் துவக்கியுள்ளனர்.ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ள கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோர், டில்லியில் நேற்று அரசு பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்கள் தாரியகஞ்ச் பகுதியில் உள்ள மாவட்ட கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று, 'லஞ்சம் வாங்காதீர்கள்' என்ற பிரசாரத்தை நேற்று மதியம் துவக்கினர்.'யார் வேண்டுமானாலும் எங்கள் குழுவில் இணைந்து இந்த பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றனர்.1