ADDED : அக் 11, 2011 12:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா: நாட்டிலிருந்து ஊழலை ஒழிப்பதே தனது யாத்திரையின் முதல் லட்சியம் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
தனது 38 நாள் ஜன் சேத்னா ரத யாத்திரை துவக்குவதற்கு முன் பேசிய அவர், 21ம் நூற்றாண்டை இந்தியாவின் ஆண்டாக மாற்றுவோம் என சூளுரைத்தார். நாட்டில் நிலவும் ஊழலால் மக்கள் வெறுப்படைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஊழலை ஒழிப்பதே தனது யாத்திரையின் முதல் லட்சியம் என்றும் அத்வானி தெரிவித்தார்.

