ADDED : ஆக 08, 2024 10:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வங்கதேச இடைக்கால அரசு பொறுப்பேற்ற முகமது யூனுஸூக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வங்க தேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் வங்கதேச இடைக்கால அரசு முகமது யூனுஷ் பொறுப்பேற்றார். அவருக்கு பிரதமர் மோடி ‛எக்ஸ்' தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,
புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள பேராசிரியர் முஹம்மது யூனுஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்துக்கள் மற்றும் பிற அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்வோம். இந்திய மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.