வேட்பாளர்களின் சொத்து மதிப்பு மத்திய அமைச்சர், 'மாஜி' முதல்வரிடம் சொந்த வாகனம் கிடையாதாம்!
வேட்பாளர்களின் சொத்து மதிப்பு மத்திய அமைச்சர், 'மாஜி' முதல்வரிடம் சொந்த வாகனம் கிடையாதாம்!
ADDED : ஏப் 16, 2024 06:45 AM
* தார்வாட் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பிரஹலாத் ஜோஷியின் சொத்து மதிப்பு 13.97 கோடி ரூபாய். இவருக்கு 6.63 கோடி ரூபாய் கடன் உள்ளது. சொந்த வாகனம் இல்லை. இவர் மீது கிரிமினல் வழக்கு இல்லை. தார்வாடில் பி.ஏ., படித்துள்ளார்
* பீதர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பகவந்த் கூபாவின் சொத்து மதிப்பு 15.55 கோடி ரூபாய். 9.09 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. கிரிமினல் வழக்கு இல்லை. ஒரு இரு சக்கர வாகனம், ஒரு இன்னோவா எஸ்.யு.வி., கார் உள்ளன. துமகூரில் பி.இ., மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு படித்துள்ளார்
* ஹாவேரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மையின் சொத்து மதிப்பு 25.58 கோடி ரூபாய். 5.31 கோடி ரூபாய் கடன் உள்ளது. சொந்த வாகனம் இல்லை. இவர் மீது கிரிமினல் வழக்கு இல்லை. ஹூப்பள்ளியில் பி.இ., மெக்கானிக்கல் பொறியியல் படித்துள்ளார்
* ஷிவமொகா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமாரின் சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய். இவருக்கு 7.14 கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒரு டொயோட்டா ஹைபிரிட் கார் உள்ளது. கிரிமினல் வழக்கு இல்லை. பெங்களூரில் பி.ஏ., படித்துள்ளார்
* பாகல்கோட் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சம்யுக்தா பாட்டீலின் சொத்து மதிப்பு 29.66 கோடி ரூபாய். 3.95 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. சொந்த வாகனம் இல்லை. இவர் மீது கிரிமினல் வழக்கு கிடையாது. பெங்களூரில் பி.பி.ஏ., - எல்.எல்.பி., படித்துள்ளார்
* பெலகாவி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிருணாள் ஹெப்பால்கரின் சொத்து மதிப்பு 13.63 கோடி ரூபாய். 10.16 கோடி ரூபாய் கடன் உள்ளது. சொந்த வாகனம் இல்லை. இவர் மீது கிரிமினல் வழக்கு கிடையாது. பெலகாவியில் பி.இ., சிவில் படித்துள்ளார்.
***

