ADDED : மார் 28, 2024 11:46 PM

நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு அற்றவர்களில் 83 சதவீதம் பேர் இளைஞர்களாக இருப்பது ஏன்? ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு எங்கே? நாட்டில் 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன்? விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆவது எப்போது?
பிரியங்கா, பொதுச் செயலர், காங்கிரஸ்
விலை கொடுப்பர்!
எதிர்க்கட்சியினரை மத்திய அரசு குறி வைக்கிறது என்பதை ஏற்க முடியாது. சி.பி.ஐ.,யும், அமலாக்கத்துறையும் தங்கள் பணியை செய்கின்றனர். தவறு செய்தவர்கள், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அதற்கான விலையை கொடுக்கின்றனர்.
பியுஷ் கோயல், மத்திய அமைச்சர், பா.ஜ.,
ரூ.150 கோடி பெற்றனர்!
மோடி தலைமையிலான மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 150 கோடி ரூபாயை ஒரு நிறுவனத்திடம் இருந்து பெற்று தொலை தொடர்பு கொள்கையை மாற்றியிருக்கிறது.
'2ஜி' ஏலம் ஊழல் என்றால் இது மட்டும் என்ன?
அசாதுதீன் ஒவைசி, தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,

