தேசிய கொடியேற்ற அமைச்சர் கெலாட்டுக்கு கவர்னர் அழைப்பு?
தேசிய கொடியேற்ற அமைச்சர் கெலாட்டுக்கு கவர்னர் அழைப்பு?
UPDATED : ஆக 13, 2024 09:13 PM
ADDED : ஆக 13, 2024 08:57 PM

புதுடில்லி: டில்லி யூனியன் பிரதேச அரசு சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியேற்ற ஆம்ஆத்மி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டிற்கு அனுமதி அளித்துள்ளார் துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா.
டில்லியில் யூனியன் பிரதேச அரசு சார்பில் ஆண்டு தோறும் சுதந்திர தினவிழா அரசு தலைமை செயலகத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் முதல்வர் தேசிய கொடி ஏற்றுவது மரபு.
இந்தாண்டு மூவர்ண கொடி ஏற்ற வேண்டி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.
சமீபத்தில் துணை நிலை கவர்னருக்கு கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் சுதந்திர தினவிழா தேசிய கொடியை எனக்கு பதிலாக கல்வி அமைச்சர் ஆதிஷி ஏற்றி மரியாதை செலுத்துவார் என கூறியிருந்தார்.
இதனை ஏற்காத துணை நிலை கவர்னர் வி.கே., சக்சேனா, இன்று (ஆக.,13) வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டை தேர்வு செய்து தேசிய கொடியை ஏற்ற அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

