sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானா போராட்டம் 8 மணி நேரம் மின்வெட்டு

/

தெலுங்கானா போராட்டம் 8 மணி நேரம் மின்வெட்டு

தெலுங்கானா போராட்டம் 8 மணி நேரம் மின்வெட்டு

தெலுங்கானா போராட்டம் 8 மணி நேரம் மின்வெட்டு


ADDED : அக் 03, 2011 12:18 AM

Google News

ADDED : அக் 03, 2011 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகரி : தனி தெலுங்கானா போராட்டத்தால், ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில், தொடர் மின்வெட்டால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்திற்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களும், தெலுங்கானா பகுதியில் உள்ளன. மின்சார உற்பத்திக்கு என, சிங்கரேணியில் நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. அரசு நிறுவனமான சிங்கரேணி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களும், அனல் மின் உற்பத்தி தொழிலாளர்களும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு, வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை, அரசு கடுமையாக எச்சரித்தது.



தனி தெலுங்கானா போராட்டத்தை வலியுறுத்தும் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதால், இவர்கள், தொடர் போராட்டம் காரணமாக, மாநில அளவில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆந்திரா, ராயலசீமா பகுதியில் உள்ள பொதுமக்களும், சிறிய, பெரிய தொழிற்சாலைகளும், மின் வெட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானா பகுதியில், ஐதராபாத் நகரைச் சுற்றி அமைந்துள்ள தனியார் தொழில் நிறுவனங்களும், ஆந்திரப் பகுதியின் பிற மாவட்டங்களில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களும், ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us