கஞ்சா சாகுபடி செய்யலாம் : போதைக்கு அல்ல.. மருத்துவ காரணத்திற்கு- இமாச்சல் சட்டசபையில் தீர்மானம்
கஞ்சா சாகுபடி செய்யலாம் : போதைக்கு அல்ல.. மருத்துவ காரணத்திற்கு- இமாச்சல் சட்டசபையில் தீர்மானம்
ADDED : செப் 06, 2024 09:28 PM

சிம்லா: மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கும் தீர்மானம் இன்று இமாச்சல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இமாச்சல் பிரதேசத்தில் கஞ்சா பயிரிடுவது சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இமாச்சல் பிரதேச அரசு மாநில பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சா சாகுபடியை போதைப்பொருள் அல்லாத பயன்பாட்டிற்காக சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஜெகத்சிங் நெகி தலைமையில் கடந்த ஆண்டு குழுவை அமைத்தது.
இக்குழு அளித்துள்ள பரிந்துரையை ஏற்று இன்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி மருத்துவம் மற்றும் தொழில்துறை காரணங்களுக்காக மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் எனவும் , மாநில பொருளாதார மேம்படுத்திட வேண்டியே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.