எத்தனால் உற்பத்தி திறன் அதிகரிப்பு : மத்திய அமைச்சர் தகவல்
எத்தனால் உற்பத்தி திறன் அதிகரிப்பு : மத்திய அமைச்சர் தகவல்
ADDED : ஆக 01, 2024 09:28 PM

புதுடில்லி: இந்தியாவில் எத்தனால் உற்பத்தி செய்யும் திறன் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளதாவது: வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் 20 சதவீத எத்தனால் கலப்படத்தை அடைய அரசு இலக்கு வைத்துள்ளது. மற்ற பயன்பாடுகளுக்கும் சேர்த்து எத்தனாலின் மொத்தத் தேவை 1350 கோடி லிட்டர் ஆகும்.
தற்போது எத்தனால் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 1,589 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது இது நாட்டின் உள்நாட்டு எத்தனால் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது.
இரு சக்கர வாகனம் பயணிகள் வாகனங்களில் போன்ற பெட்ரோல் அடிப்படையிலான வாகனங்களின் வளர்ச்சி கணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்குள் 1700 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி திறன் தேவை.
தானிய பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகத்திடம் ஆக. 1, 2024 முதல் நேரடியாக கொள்முதல் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.