ஆன்லைன் பண பரிவர்த்தனையில் புதிய சாதனை; ஆகஸ்ட் 2ல் 70.7 கோடி பரிமாற்றங்கள்!
ஆன்லைன் பண பரிவர்த்தனையில் புதிய சாதனை; ஆகஸ்ட் 2ல் 70.7 கோடி பரிமாற்றங்கள்!
ADDED : ஆக 06, 2025 02:31 PM

புதுடில்லி: யு.பி.ஐ., வரலாற்றில் புதிய உச்சமாக ஆகஸ்ட் 2ம் தேதி 70.7 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளது என என்.பி.சி.ஐ., எனும் தேசிய பண பரிமாற்ற கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் யுபிஐ இப்போது 85 சதவீதமும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 50 சதவீதமும் பங்கு வகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய காலத்தில், யுபிஐ பண பரிவர்த்தனைகள் அதிகம் நடந்து வருகிறது. மாதம் தோறும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தரவுகளை என்.பி.சி.ஐ., வெளியிட்டு உள்ளது.
இதில் யு.பி.ஐ., மட்டுமல்லாது ஆதார் முறையிலான பேமென்ட்ஸ் மற்றும் ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.பி.ஐ., வரலாற்றில் புதிய உச்சமாக ஆகஸ்ட் 2ம் தேதி 70.7 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளது. இது மிக பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஜூலையில் சராசரியாக தினமும் 65 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அடுத்தாண்டு தினசரி 100 கோடி பரிமாற்றங்கள் என்ற நிலை உருவாகும் என தேசிய பேமண்ட் கார்பரேஷன் கணித்துள்ளது.
அடுத்த ஆண்டிற்குள் 100 கோடி பரிவர்த்தனைகள் என்ற இலக்கை அடைய தள்ளுபடிகள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் கேட்டு கொண்டுள்ளது.

