மேற்கு ஆசிய நிலவரம்: இஸ்ரேல் பிரதமருக்கு தொலை பேசியில் மோடி அறிவுரை
மேற்கு ஆசிய நிலவரம்: இஸ்ரேல் பிரதமருக்கு தொலை பேசியில் மோடி அறிவுரை
ADDED : ஆக 17, 2024 01:04 AM

புதுடில்லி;: இஸ்ரேல் -காசா விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, நேற்று தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடியிடம் பேசினார். அப்போது 78 சுதந்திர தின வாழ்த்துக்களை இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்து மேற்காசியாவின் தற்போதைய நிலவரம் ,இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் விவாதித்தனர்.
இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, இஸ்ரேல் - காசா இடையே போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர வேண்டும், அனைத்து பிணை கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு மோடி வலியுறுத்தினார்.

