ஆயுர்வேத சிகிச்சை வேணுமாம்: சர்ச்சை சாமியாருக்கு 7 நாள் பரோல்
ஆயுர்வேத சிகிச்சை வேணுமாம்: சர்ச்சை சாமியாருக்கு 7 நாள் பரோல்
ADDED : ஆக 13, 2024 08:16 PM

ஜோத்பூர்: ஆசிரம சிறுமிகளை சீரழித்த சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு மருத்துவ சிகிச்சைக்காக 7 நாள் பரோல் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு 83 குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமம் உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆசிரம சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2018ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரம சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2013ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கோர்ட் விசாரித்து, சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 2023-ல் ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வயது முதுமை காரணமாக கடந்த வாரம் டில்லி எய்ம்சில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள பரோல் வேண்டி ராஜஸ்தான் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சாமியாருக்கு 7 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

