UPDATED : மார் 27, 2024 09:56 PM
ADDED : மார் 27, 2024 09:50 PM

சென்னை: தமிழகத்தில் இதுவரை லோக்சபா தேர்தலில் போட்டியிட 1403 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரிஉள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு இடை தே்ர்தலும் வரும் ஏப். 19-ல் தேர்தல் நடக்கிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இதுவரை பல்வேறு கட்சிகள் சார்பில் 1403 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக முதல் மூன்று இடங்களில் கரூர் தொகுதியில் 62 பேரும், வடசென்னை தொகுதியில் 54 பேரும், கோவை தொகுதியில் 53 பேரும், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
குறைந்தபட்சமாக நாகபட்டினம் தொகுதியில் 13 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். தவிர விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

