போலீஸ் ஸ்டேசனில் சீருடையில் பெண் போலீஸ் குத்தாட்டம்
போலீஸ் ஸ்டேசனில் சீருடையில் பெண் போலீஸ் குத்தாட்டம்
UPDATED : ஆக 25, 2024 07:26 AM
ADDED : ஆக 24, 2024 11:57 PM

நாக்பூர்: சுதந்திரத்தன்று காவல் நிலைய வளாகத்தில் சீருடையுடன் ஹிந்தி பாடலுக்கு நடனமாடி கொண்டாடிய இரு பெண் போலீஸ் உள்பட நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நாக்பூரில் நடந்தது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் காந்தி பெளக் போலீஸ் ஸ்டேசன் இங்குள்ள போலீஸ் ஸ்டேசன் வளாகத்திற்குள் ,கடந்த 15-ம் தேதி சுந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் பிரபல ஹிந்தி பாடலுக்கு இரு பெண் போலீசார், இரு ஆண் போலீசார் நான்கு சீருடையுடன் நடமானடினர்.
இதன் வீடீயோ இணையதளத்தில் வைரலானதையடுத்து நடத்திய விசாரணையில் சீருடையில் நடனமாடிய உதவி எஸ்.ஐ., சஞ்சய் பட்னாகர், தலைமை காவலர் அப்துல் கனி, காவலர்கள் பாக்யாஸ்ரீ, நிர்மலா காவ்லி என தெரியவந்தது.
அவர்கள் மீது துணை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்த துணை போலீஸ் கமிஷனர ராகுல் மட்னே, நான்கு போலீசாரையும் 3 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

