பஸ்- டெம்போ மோதிய விபத்து: உ.பி.,யில் 10 பேர் பரிதாப பலி; 20 பேர் படுகாயம்
பஸ்- டெம்போ மோதிய விபத்து: உ.பி.,யில் 10 பேர் பரிதாப பலி; 20 பேர் படுகாயம்
ADDED : ஆக 18, 2024 01:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: உத்தரபிரதேசத்தில், பஸ்சும், டெம்போவும் மோதி விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், புலந்தசாகர் மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் 22 பேர் டெம்போவில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த பஸ், டெம்போவை முந்தி செல்ல முயன்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணை
பயணித்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். அவர்களை அக்கம் பக்கத்தினர், மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சை டிரைவர் வேகமாக இயக்கியதே, விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.