ADDED : ஜூலை 17, 2024 09:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மஹாராஷ்டிராவில் நக்சல்களுக்கு எதிரான வேட்டையில் 12 நக்சல்கள் பாதுகாப்புபடை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிரா -சத்தீஷ்கர் மாநில எல்லை பகுதியான கட்ஜிரோலி மாவட்டம் நக்சல்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இங்கு நக்சல்கள் எதிர்ப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த நக்சல்களை சுற்றி வளைக்கப்பட்டனர்.
இதில் ஏற்பட்ட மோதலில் 12 நக்சல்கள் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இரு பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர்.சம்பவ இடத்தில் ஏ.கே. 47 ரகதுப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்கள் என பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன