குற்ற வழக்கு உள்ள 138 பேர் தேர்தலில் போட்டி: வெளியான ஆய்வறிக்கை!
குற்ற வழக்கு உள்ள 138 பேர் தேர்தலில் போட்டி: வெளியான ஆய்வறிக்கை!
ADDED : ஏப் 11, 2024 04:07 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் 138 பேர் மீது குற்ற வழக்கு உள்ளது என ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டம் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஏழாம் கட்டம் ஜூன் 1ம் தேதி முடிகிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எத்தனை பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு நடத்தியது.
குற்ற வழக்கு
இது குறித்து, ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் 138 பேர் மீது குற்ற வழக்கு உள்ளது. 950 வேட்பாளர்களில் 23 பேருக்கு எழுதப்படிக்க தெரியாது.
3 பேர் அதிக கடன் உள்ளவர்கள். தேர்தலில் களம் காணும் 950 வேட்பாளர்களில் 202 பேர் கோடீஸ்வரர்கள், 8 பேர் எந்த சொத்தும் இல்லாதவர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

