UPDATED : மே 31, 2024 06:20 AM
ADDED : மே 30, 2024 04:58 PM

ஜம்மு: காஷ்மீரில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே உள்ள அக்னூர் பகுதியில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: பஸ் விபத்தில் 22 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.