இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்கள்: கேரள பெண் மீட்பு
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்கள்: கேரள பெண் மீட்பு
ADDED : ஏப் 18, 2024 05:10 PM

புதுடில்லி: ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் இன்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்டார். இவர் பத்திரமாக நாடு திரும்பினார். அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. சமீபத்தில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா பகுதியில் சென்ற, இஸ்ரேலுக்கு சொந்தமான 'எம்.சி.எஸ்.ஏரிஸ்' என்ற சரக்கு கப்பலை, ஈரான் படை சிறை பிடித்தது.
இந்த கப்பலில் இருப்பவர்களில், 17 பேர் இந்தியர்கள் என கண்டுப்பிடிக்கப்பட்டது. சரக்கு கப்பலில் உள்ள 17 இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் இன்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்டார். இவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். இவர் இன்று பத்திரமாக நாடு திரும்பினார். அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெளியுறவுத்துறை
‛‛ கப்பலில் மீதமுள்ள 16 இந்திய பணியாளர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை விரைவில் மீட்போம்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

