ADDED : ஏப் 12, 2024 05:56 AM

மைசூரு: மைசூரு, குடகு, சாம்ராஜ்நகரில் இன்றும், நாளையும் முதல்வர் சித்தராமையா பிரசாரம் செய்கிறார்.
லோக்சபா தேர்தலில் மைசூரு, சாம்ராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் சித்தராமையா உறுதியாக உள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மைசூரு, சாம்ராஜ் நகருக்கு சித்தராமையா அடிக்கடி வந்து பிரசாரம் செய்வதுடன், கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதன் பலனாக, பா.ஜ., - ம.ஜ.த.,வின் பலர் காங்கிரசில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 10:00 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகாலின் லிங்கனபுராவுக்கு முதல்வர் செல்கிறார். அங்கு பிரசாரம் செய்த பின், ஹெலிகாப்டரில் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்துக்கு செல்கிறார்.
அங்கிருந்து நஞ்சன்கூடில் நடக்கும் பிரசாரத்தில் பங்கேற்கிறார். மாலை 4:45 மணிக்கு எச்.டி.கோட்டேயில் பிரசாரம் செய்கிறார். அதை முடித்து கொண்டு, இரவு மைசூரில் தங்குகிறார்.
நாளை 13ம் தேதி காலை 11:00 மணிக்கு கே.ஆர்., சட்டசபை தொகுதியில் பிரசாரம்; அதன் பின் மதியம் 1:30 மணிக்கு ஹுன்சூரிலும்; மாலை 4:45 மணிக்கு பெரியபட்டணாவில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

