குடிநீரில் கார் கழுவிய பெங்களூருவாசிகள்: 22 குடும்பத்துக்கு அபராதம்
குடிநீரில் கார் கழுவிய பெங்களூருவாசிகள்: 22 குடும்பத்துக்கு அபராதம்
ADDED : மார் 25, 2024 04:09 PM

பெங்களூரு: தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சல் மற்றும் கார் கழுவுதல் உள்ளிட்ட தேவையற்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. புறநகர் பகுதிகளில், வாரம் ஒரு முறை மட்டுமே, குடிநீர் வினியோகிப்பதால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் திண்டாடுகின்றனர்.
இந்த மாத துவக்கத்தில், குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை மனதில் வைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பரிந்துரைத்தது. வாகனங்களை கழுவுதல் உள்ளிட்ட தேவையற்ற பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சல் மற்றும் கார் கழுவுதல் உள்ளிட்ட தேவையற்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். 22 குடும்பங்களிடம் இருந்து ரூ. 1.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

