UPDATED : ஏப் 27, 2024 07:47 AM
ADDED : ஏப் 27, 2024 07:26 AM

புதுடில்லி: 2ம் கட்ட லோக்சபா தேர்தலில், கேரளாவில் 70.21% ஓட்டுகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், 78.53% ஓட்டுகளும், குறைந்தபட்சமாக உத்தர பிரதேசத்தில், 54.85 % ஓட்டுகளும் பதிவாகின.
நாடு முழுவதும், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 88 லோக்சபா தொகுதிகளுக்கு, நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். 2ம் கட்ட லோக்சபா தேர்தல் 88 தொகுதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது. அங்கு 63.5% ஓட்டுகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில் மொத்தம் 54.85 % ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ராஜஸ்தானின் 13 தொகுதிகளில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், மொத்தம் 64.07% ஓட்டுகள் பதிவாகியுள்ளன. பீஹாரில், ஐந்து தொகுதிகளில் 57.81% ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
கேரளாவில் 70.21% ஓட்டுகள் பதிவாகியுள்ளது. ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியில் 72.70% ஓட்டுகள் பதிவாகி உள்ளது என இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், 78.53% ஓட்டுகளும், குறைந்தபட்சமாக உத்தர பிரதேசத்தில், 54.85 % ஓட்டுகளும் பதிவாகின. மணிப்பூரில் 77.18 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
சத்தீஸ்கரில் 75.16 சதவீத ஓட்டுகளும், கர்நாடகாவில், 68.47 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

